OneIndia Tamil
ரஜினிக்கு கொடுத்த பிரஷர் மாதிரியே.. மே.வங்கத்தில் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா கங்குலி?
கொல்கத்தா: தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்வைத்து பேசப்பட்டதை போல சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மேற்கு வங்கத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியும் பந்தாடப்பட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் வரும் 7-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜகவில் கங்குலி இணைவார் என தகவல்கள்
நாடு முழுக்க சிஏஏ பற்றி பேசுகிறீர்கள்.. அசாமில் வாய் திறக்காதது ஏன்? பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி
திஸ்பூர்: நாடு முழுவதும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது குறித்துப் பேசும் பாஜக, அசாம் மாநிலத்தில் அச்சட்டத்தைப் பற்றி வாய் திறக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அசாம் சட்டமன்றத்திற்கு வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் அசாம் மாநிலத்தில்
கொரோனா தடுப்பூசி இந்திய நிறுவனங்களை குறி வைத்த சீன ஹேக்கிங் குழு
இந்தியாவின் இரண்டு முக்கிய கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப அமைப்புகளை, சீன அரசின் உதவி பெறும் ஹேக்கர் குழு இலக்கு வைத்ததாக சைஃபர்மா (Cyfirma) என்கிற சைபர் நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அ.ம.மு.க தலைமையை ஏற்கும் கட்சிகளுடனேயே கூட்டணி: டி.டி.வி. தினகரன்
(தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நடந்து வரும் அரசியல் கட்சிகளின் முக்கிய நிகழ்வுகள், சந்திப்புகள் தொடர்பான தகவல்களின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடனேயே கூட்டணி மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சசிகலா நடராஜனை அவர் வசித்து
சீன ஹேக்கர்களுக்கு மும்பை மின்வெட்டில் தொடர்பா? அமெரிக்க நிறுவனம் அறிக்கை; இந்தியாவின் பதில் என்ன?
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக அறியப்படும் மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி திடீர் மின் வெட்டு ஏற்பட்டு நகரம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இருளில் மூழ்கிய விவகாரத்தில் விசாரணைக்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருக்கிறார். https://twitter.com/AnilDeshmukhNCP/status/1366409077711020035 திடீர் மின்வெட்டுக்கான காரணத்தை மாநில மின் விநியோகத்துறை அறிய முடியாத நிலையில்,
'அவரை விட்டால் வேறு ஆள் இல்லை' - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ரங்கசாமியை கரை சேர்ப்பாரா?
திருப்பரங்குன்றம்: 'புதுச்சேரி மக்களுக்கு என். ஆர். ரங்கசாமி அவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை' என்று முன்னாள் புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காரைக்காலில் கடந்த பிப்.28ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''என்னுடைய அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையில்
பயங்கரம்.. காலங்காத்தாலே.. கோயில் வாசலில் கிடந்த \"மனித\" தலை.. அலறிப்போன தஞ்சை..!
தஞ்சாவூர்: விடிகாலையில், கோயில் வாசலில் மனித தலை விழுந்து கிடந்ததை பார்த்ததுமே தஞ்சாவூரே இன்று அலறிப்போய்விட்டது, தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் மணி.. 19 வயசுதான் ஆகிறது.. ஆனால், இவர் ஒரு கிரிமினல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஏகப்பட்ட கேஸ்கள் இவர்மீது உள்ளன.! இந்நிலையில், நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பக்கம்
நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் டொனால்டு டிரம்ப், கிரேட்டா துன்பெர்க் ...முடிவு அக்டோபரில்!
ஓஸ்லோ: 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் 329 பேர் உள்ளதாக நோபல் விருது கமிட்டி கூறியுள்ளது. இந்த பட்டியலில் டொனால்டு டிரம்ப், கிரேட்டா துன்பெர்க், அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட பலரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக நோபல் விருது கமிட்டி தெரிவித்துள்ளது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும்
மாநகராட்சி தேர்தல்களைப் போல...குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி.. 2-வது இடத்தில் காங்.
அகமதாபாத்: மாநகராட்சி தேர்தல்களைப் போல குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் குஜராத் மாநகராட்சி தேர்தல்களில் பாஜக மிகப் பெரும்பாலான இடங்க்ளை கைப்பற்றி சாதனை படைத்தது. காங்கிரஸ் கட்சி 2-வது இடத்திலும் சில இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும் வென்றன. இந்த நிலையில் குஜராத்தின் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்
'தயவு செய்து நீதி வாங்கிக் கொடுங்க'.. கைக்கூப்பி மன்றாடிய பெண் - ஆக்ஷனில் உ.பி. போலீஸ்
ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனக்கான நீதியை வேண்டி கெஞ்சும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், கடந்த 2018ம் ஆண்டு, பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த கௌரவ் ஷர்மா என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
வெடித்தது கலகம்- ஜம்முவில் குலாம் நபி ஆசாத் கொடும்பாவி எரித்த காங். தொண்டர்கள்
ஶ்ரீநகர்: காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் எரித்ததால் ஶ்ரீநகரில் பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து வருகிறார் குலாம்நபி ஆசாத். தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்படாத நிலையில் அந்த கோபத்தை காட்டி வருகிறார் குலாம்நபி ஆசாத்.
ம.பி.யில் சோகம்... கொரோனா தொற்றுக்கு பாஜக எம்பி உயிரிழப்பு... பிரதமர் மோடி இரங்கல்!
போபால்: மத்திய பிரதேச மாநில பாஜக எம்பி நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்த நந்த்குமார் சிங் சவுகான் நேற்று இரவு உயிரிழந்தார். நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை... அதிரடி சட்டத்தை கொண்டு வந்த பஞ்சாப்!
அமிர்தசரஸ்: பஞ்சாபில் போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவர் விற்கும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதனை விற்றவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். கடந்த ஆண்டு பஞ்சாபின் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும்
அயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல்...தஞ்சையில் வெளியீடு
தஞ்சாவூர் : அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதற்காகவும், அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. கோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழின் வளர்ச்சிக்காக பல தொண்டுகளை ஆற்றி வருகின்றனர்.
கூரை கூட கிடையாது.. குடையின் கீழ் டீக்கடை.. 155 வகையான டீ..ஒரு கப் டீயின் விலை ரூ 1000.. அடேங்கப்பா!
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய டீக்கடையில் 100-க்கும் மேற்பட்ட வகையான தேநீர் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ரூ 12 முதல் ரூ 1000 வரை விற்கப்படுகின்றன. கொல்கத்தாவின் முகுந்தபூரில் நிர்ஜாஷ் என்ற ஒரு சிறிய டீக்கடை உள்ளது. இங்கு ஒரு கப் டீ ரூ 1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைக்கு கூரை கூட கிடையாது, குடையையே
வரலாற்று நிகழ்வு.. இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
ஜெருசலேம்: வரலாற்று நிகழ்வாக இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் நேற்று ஜெருசலேமில் பொறுப்பேற்றுக்கொண்டார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தமான உடன்படிக்கையின்படி, இரண்டு நாடுகளும் தூதரக உறவை ஏற்படுத்தி உள்ளன. இஸ்ரேலிய அதிபர் Reuven Rivlin முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் முகமது அல் காஜா,
85 வயது மூதாட்டி தாக்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம்... பாஜக நிர்வாகியே தாய் மீது தாக்குதல்?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகியும் அவரது 85 வயது தாயாரும் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, அவரது மகனே பல மாதங்களாகத் தாயை தாக்கி துன்புறுத்துவார் என்று உறவினர் ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என மூவரும்
இந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு
ஜெய்ப்பூர்: இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி செயல்பாட்டாளரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச பின்னணி பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க்,
ஆட்சியை தக்க வைக்க மம்தாவின் புதிய வியூகம்...முதல் குறி இவர்களின் ஓட்டுக்கள் தான்
கொல்கத்தா : 2021 சட்டசபை தேர்தல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாழ்வா - சாவா நிலை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கட்சிக்குள் அவருக்கு அத்தனை எதிர்ப்புக்கள் உள்ளது. நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை, 2011 ல் தன் வசப்படுத்தியவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. தொடர்ந்து 10
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் இருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர்