Top News
மம்தா பானர்ஜிக்கு அச்சுறுத்தல்! இரவு முழுக்க.. யார் அந்த மர்ம நபர்? பரபரக்கும் மேற்கு வங்க போலீஸ்
கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டின் சுவர் ஏறிக்குதித்து இரவு முழுவதும் பதுங்கிய மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீடு தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கலிகாட் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் சுவர் ஏறிக்குதித்த மர்ம நபர்
ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதி! இத்தனை நாளாக பாஜக ஐடி விங்கில் நிர்வாகியாக செயல்பட்டது அம்பலம்
ஸ்ரீநகர்: தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இவர் தற்போது பாஜக நிர்வாகியாக இருந்து வருகிறார். ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள்,
நேபாளம் டூ காரைக்கால்.. அச்சுறுத்தும் காலரா நோய்! இதுக்கும் அந்த “உணவு” தான் காரணமா?
காரைக்கால்: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த சில நாடுகளுக்கு முன்பாக காலரா நோய் அதிகளவில் பரவிய நிலையில், தற்போது காரைக்காலிலும் காலரா பரவத் தொடங்கி இருப்பதால் இதற்கும் பானிபூரி தான் காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உணவும் நொருக்கு தீனி வகையாக பானி பூரி
மழை வேண்டும்.. முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்.. மறக்காமல் மூக்கில் முத்தம் வேறு!
மெக்சிகோ: மழை மற்றும் இயற்கை வளங்கள் வேண்டி, மேயர் ஒருவர் 7 வயது பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் மெக்ஸிகனில் நடந்துள்ளது. நாட்டிற்கு நாடு சடங்குகளும், சம்பிரதாயங்களும் வேறுபடும். நம் நாட்டில் மழை வேண்டி கழுதைக்கு, நாய்க்கு என விலங்குகளுக்கு திருமணம் செய்து வைப்பது போல், மெக்ஸிகனில் ஹிஸ்பானிக் என்ற முதலையைத் திருமணம்
தவித்த நோயாளி! கண்கலங்கிய மனைவி!ரத்ததானம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்! ஜார்கண்டில் நெகிழ்ச்சி!
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு விழாவுக்காக சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் நோயாளி ஒருவருக்கு ரத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பன்னா
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் சாலை விபத்தில் மரணம்
கோத்தகிரி: தமிழகத்தையே அதிர வைத்து கொண்டிருக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை
\"நீ அதுக்குத்தான் லாயக்கு\" - வீடியோ காட்டி பேராசிரியர் மிரட்டுவதாக மதுரை மாணவி புகார்
"நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக மாணவி ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக
மீண்டும் கொரோனா: தமிழ்நாடு நான்காவது அலையை நோக்கிச் செல்கிறதா?
தமிழ்நாட்டில் கடந்த வாரம் கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 2,000 தாண்டியதை அடுத்து, பள்ளிகளில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், 10 நபர்களுக்கு மேல் கூடும் இடங்களில் முக கவசம்அணிவதோடு, சமூக இடைவெளியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நான்காவது அலையை நோக்கி
யாழ். பலாலியில் இருந்து விமான சேவை தொடங்குவதில் தாமதம்: இந்தியா மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் பாய்ச்சல்
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்க தாமதமாவதற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டி இருக்கிறார். இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தமிழகத்தில் தஞ்சமடைந்து கொலை வழக்கில் சிக்கியவர். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். அந்நாட்டில் பெரும்பாலான அரசுகளில் அமைச்சராக வலம் வருபவர்
ஆபரேஷன் கமல்.. அடுத்த குறி எந்த மாநிலம்? முக்கிய தலைக்கு ரவுண்டு கட்டும் பாஜக- அதிர்ர்ச்சியில் காங்!
ஜெய்பூர் : மகாராஷ்டிராவை அடுத்து பாஜகவின் கவனம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியிருப்பதாகவும், தேர்தல் வரை கூட காத்திருக்காமல் அடுத்த திட்டம் அரங்கேறும் என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. அதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும்,
பயங்கர கொந்தளிப்பு.. நடுக்கடலில் கப்பல் இரண்டாக நொறுங்கி மூழ்கியது.. 27 பேர் மாயம்.. ஹாங்காங் சோகம்
பெய்ஜிங்: ஹாங்காங் அருகே கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கியதில், 27 பேர் மாயமாகி உள்ளனர். தென்சீன கடல் பகுதியில், மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கப்பல் இரண்டாக உடைந்து நொறுங்கி விழுந்தது.சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியாக ஹாங்காங் உள்ளது.. இதனிடையே, ஹாங்காங்கில் தென்சீன கடல் பகுதியில் கப்பல் ஒன்று
தொடரும் சோகம்.. உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 553,982,352 பேர் பாதிப்பு.. 6,360,706 பேர் பரிதாப பலி
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.60 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.60 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த வைரஸ் தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,360,706 பேரை
“பொதுசிவில் சட்டம்” - அடுத்த பரபரப்புக்கு தயாராகிறதா இந்தியா? விதைபோடும் உத்தராகண்ட் பாஜக அரசு
டேராடூன்: அனைத்து மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக்கொண்டு இருக்கிறார். உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்ட புஷ்கர் சிங் மறுநாளே பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என அவர் உறுதியளித்தார். இதில் முக்கிய வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை
இப்படி யோசிச்சா எப்படி? மின்கம்பங்களோடு கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர்! இது திருப்பத்தூர் மாடல்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஏற்கனவே மின்கம்பங்கள் இருக்கும் நிலையில் அதனை அப்புறப்படுத்தாமல் அதனுடன் சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக தார் சாலை, சிமென்ட் ரோடு, கால்வாய் அமைத்தல் உள்பட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தீவிரமாக
ஸ்ருதிஹாசன்: \"உடல்நிலை சரியில்லை, உள்ளம் சரியாக இருக்கிறது\" - ஹார்மோன் பிரச்னை என்ன பேசினார்?
தனக்கு பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் எனும் ஹார்மோன் பிரச்னைகள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன், அதனை உடற்பயிற்சி, முறையான உணவுப்பழக்கத்தின் மூலம் எதிர்கொண்டு வருவதாக தன்னம்பிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் என மோசமான ஹார்மோன் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறேன்.
\"திரௌபதி முர்மூவுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு\" - மமதா பானர்ஜி
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மூவுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அதோடு, அவருக்கு குடியரசு தலைவர் தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத்
இறுகும் பிடி.. விசாரணைக்கு ஆஜராகாத நுபுர் சர்மா.. லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய கொல்கத்தா போலீஸ்
கொல்கத்தா: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மா மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்
உதய்பூர் கொலையாளிகளுக்கு அடி, உதை.. ”சட்டையை” கிழித்து சட்டத்தை கையில் எடுத்த வழக்கறிஞர்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி தையல்காரரின் தலையை துண்டித்து படுகொலை செய்தவர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டனர். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல்
உதய்பூர் கொடூரம்! கைதானவர் பாஜக? பகீர் கிளப்பிய காங்.. ‘விடுதலைப் புலிகள்’ குறுக்கே வந்த மால்வியா!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட தையல் கடைக்காரர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என காங்கிரஸ் பரபரப்பு புகார் கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் இதனை பாஜக மறுத்துள்ளது. ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரர் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில்
வானில் தோன்றிய மர்ம பொருட்கள்.. கொரோனாவுக்கு காரணம் \"ஏலியன்?\" வட கொரியா கொடுத்த வினோத விளக்கம்
சியோல்: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து இருந்த நிலையில், இது குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. ஓமிக்ரான் உள்ளிட்ட காரணங்களால் உலகெங்கும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதிலும் கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகளாக ஏற்படாமல் இருந்த வடகொரியாவிலும் கூட ஓமிக்ரான் காரணமாக