OneIndia Tamil
ஒன்றா வாழ முடியல! ஒன்றாக அடக்கம் செய்யுங்க! கடிதம் எழுதி காதலன் வீட்டில் காதலி எடுத்த \"அந்த\" முடிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 3 மாதத்துக்கு முன்பு காதலன் தற்கொலை செய்த நிலையில் அவரது வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக, ‛‛ஒன்றாக வாழதான் முடியல. ஒன்றாக அடக்கம் செய்யுங்க'' என உருக்கமாக கடிதம் எழுதி வைத்தது தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா
தருமபுர ஆதீன மடத்தில் இன்று இரவு பட்டினப் பிரவேசம்- அரசியலாக்க வேண்டாமே... ஆதீனம் வீடியோ வேண்டுகோள்
தருமபுரம்: தருமபுர ஆதீன மடத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழா மற்றும் குருமுதல்வர் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேசம் இன்று இரவு நடைபெறுகிறது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று நாற்காலி
கார்பரேட் ஆதரவு.. பிரதமரை காலி செய்த ஆஸ்திரேலிய மக்கள்! தேர்தலில் சரித்திரம் படைத்த தொழிலாளர் கட்சி
கான்பெரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி குறைவான இடங்களில் வெற்றி தோல்வியை தழுவ, லிபரல் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது ஏராளமான இந்தியர்கள் வாழும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் இருந்துவந்த ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி அரசின் 3 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமரை தேர்வு
திக்கற்ற நிலையில் இலங்கை மக்கள்... ஆஸ்திரேலியா வரை சென்ற படகு - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
கான்பெரா: பொருளாதார நெருக்கடியால் இலங்கையைவிட்டு மக்கள் வெளியேறி வரும் நிலையில், ஆஸ்திரேலியா கடல் எல்லைக்குள் வந்த இலங்கை படகை அந்நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உணவு உள்ளிட்ட
\"உன் பெயர் என்ன முகமதா? ஆதாரை காட்டு\" முதியவரை கொடூரமாக தாக்கும் ஷாக் வீடியோ.. உடல் சடலமாக மீட்பு
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனநல பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும்
சவால் விட்டபடி வரப்போறாரு அண்ணாமலை.. பல்லக்கு சுமப்பாரா? - மீண்டும் போராட்டம்? ‘பரபர’ சூழல்!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடத்தில் நாளை நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நானே பல்லக்கை சுமக்க நேரில் வருவேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் பட்டினப் பிரவேச விழாவில் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.
\"மாட்டுக்கறி கிம்\".. நிலைமை மோசம்.. சுருண்டு விழும் வடகொரியா மக்கள்.. எங்கும் \"ஹெர்பல்\" மயம்.. ஏன்?
பியோங்யாங்: வடகொரியாவில் நிலைமை சரியில்லை.. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டு அதிபர் கிம், அடுத்து என்ன செய்ய போகிறாரோ என்ற கவலை மக்களை சூழ்ந்துள்ளது..! உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. அதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. அடிக்கடி
மனைவியைக் கொல்ல பக்கா ப்ளான்! இருட்டில் மாறிப்போன கெளசர்! துடித்து அடங்கிய உயிர்! அலறிய ஆம்பூர்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சாலையோரம் படுத்திருந்த பெண்ணை தனது மனைவி என நினைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த மாட்டு வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே ஆம்பூர் பகுதியை சேர்ந்த சில பெண்கள் படுத்து உறங்கி
பல்லாயிரம் ஆண்டுகளாக.. மனித குலம் காணாத அதிசயம்.. சீனாவில் 630 அடி குழி.. உள்ளே பார்த்தால் சொர்க்கம்
பெய்ஜிங்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 630 அடி குழி உலக மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழி குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பூமியில் நாம் காணாத.. நமக்கு தெரியாத பல அதிசயங்கள்.. ஆச்சர்யங்கள் உள்ளன. என்னதான் மனிதன் வேற்று கிரகங்களில் ஆராய்ச்சிகள் செய்தாலும் இன்னமும் நாம் கண்டுபிடித்த பல இடங்கள், உயிரினங்கள். வைரஸ்கள் இந்த
நீங்க வந்தா மட்டும் போதும்! நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு இலவச டிக்கெட்! ஸ்வீட், ஸ்நாக்ஸ் வேற..!
திருப்பத்தூர் : திமுக இளைஞரணி தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதோடு, இனிப்பு காரம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கனா படத்தின் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு
எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? - 'சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்'
சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறது ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்
குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன? - உலகெங்கும் 11 நாடுகளில் பரவல்
உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் இன்னும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் வெவ்வேறு நாடுகளில் உள்ள மேலும் 50 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக
என்ன கொடுமை சார் இது? 12 வயது சிறுமிக்கு ‘குவாகுவா’! கட்டிட தொழிலாளியை கட்டம்கட்டி தூக்கிய போலீஸ்!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சங்கிலி குப்பம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பள்ளி
வாசலில் \"கள்ளக்காதலன்\".. சாம்பார் வைத்தே கணவனை \"காலி\" செய்த ஒத்த ரோசா.. கையாலேயே ஊட்டி விட்டாராம்
ஜெய்ப்பூர்: நைட் டின்னரை கணவனுக்கு மனைவி தன் கையாலேயே ஊட்டிவிட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த பகீர் சம்பவம் நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள தௌசா மாவட்டத்தில் லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்டது சாந்த்சென் என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஓம் பிரகாஷ் குர்ஜார்.. இவரது மனைவி பெயர் ரெஸ்டா..
சிவப்பு கம்பள வரவேற்பில் மேலாடையின்றி ஓடிய பெண்! கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு! பின்னணி இதுதான்
கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பின்போது திடீரென்று பெண் ஒருவர் மேலாடையின்றி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போர் நடவடிக்கையின்போது ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அவர் இத்தகைய செயலை செய்தது தெரியவந்துள்ளது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில்
4 4 4 4 4 4 4 ... அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாப்பா ஸ்பெஷல்?.. ஒரு 4 பேராவது படிங்கப்பா!
01. ‘நாலு' பேரு ‘நாலு' விதமா பேசுவாங்க. 02. ‘நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 03. ‘நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....???? 04. ‘நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும். 05. அவரு ‘நாலு'ம் தெரிஞ்சவரு., ‘நாலு'ம் புரிஞ்சவரு. 06. ‘நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும். ஏன் இந்த ‘நாலு'
வேலையை காட்டும் சீனா.. எல்லையில் கட்டும் பாலம்.. வெளியானது சேட்டிலைட் போட்டோ.. எகிறும் ராகுல்காந்தி
லடாக்: பாங்காங் டிசோ ஏரியில் சீனா, 2வது பாலம் கட்டி வருகிறது.. சீன ராணுவம் கட்டி வரும் அந்த பாலத்தின் செயற்கைக்கோள் போட்டோவும் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.. இந்த பாலம் கட்டுவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..! கடந்த 2 வருடத்துக்கும் மேலாக மேலாக கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா
மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் இன்று நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு செய்தார். குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனம் மடாதிபதியை பல்லக்கில் தூக்கி சென்றனர். தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் கடுமையாக
மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு - கோடையில் நிரம்பும் அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளதால் குறுவை சாகுபடிக்கு முன் கூட்டியே அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றில் கோடை
அடேங்கப்பா.. பெரம்பலூர் மாவட்ட காவல்துறையே வாழ்த்துதாம்- நெஞ்சுக்கு நீதிக்கு பேனர் வைத்த போலீஸ்காரர்
பெரம்பலூர்: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும்‘நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு போலீஸ்காரர் ஒருவர் பேனர் வைத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் ‘நெஞ்சுக்கு நீதி' பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரைச் சேர்ந்த கதிரவன் என்ற போலீஸ்காரர் "உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற